Tuesday, 12 July 2011

மக்கள் தொகை தினம் - தினமலர் ஆல்பம்

இன்றைய தினமலரில் ஒரு செய்தி, புகைப்படத்துடன்.

ஆச்சர்மில்லை...! இது அதை விட அபாயகரமானது. உலக மக்கள் தொகை தினமான நேற்று சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனையில் பிறந்த அடுத்த எண்ணிக்கை தான் இந்த குழந்தைகள். தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டு மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்தை தாண்டியும், உலக மக்கள் தொகை 121 கோடியை தாண்டியும் சென்று கொண்டிருக்கின்றன.

இதனுடன் ஒரு புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை அவர்கள், புகைப்படம் இல்லாமல் வெளியிட்டிருக்கலாம். அவர்கள் பிரசுரித்த புகைப்படத்தில், 6 அல்லது 7  அம்மாக்கள், பிறந்த சிலமணிநேரங்களே ஆன குழைந்தைகளுடன் இருக்கிறார்கள். இந்த செய்தியை அவர்கள் வாசிக்கும்போது, நம் குழந்தைகள் என்ன வெறும் “எண்ணிக்கைகளா?” என்ற என்னம் தோன்றாதா?

பத்திரிக்கையில் புகைப்படம் வரும் என்கிற ஆசையில் அவர்கள் சம்மதித்திருக்கலாம். என்ன செய்திக்காக என்று அவர்களிடம் சொல்லியிருப்பார்களா தெரியவில்லை.

பத்திரிக்கை என்பது, வெறுமனே செய்திகளை பிரசுரிப்பது மட்டுமா? எதை, எந்தநேரத்தில், எப்படி வெளியிடுவது என்று ஒரு முறைவேண்டாமா? இதுபோல நிறைய செய்திகள்.

அதிகரிக்கும் மக்கள்தொகை ஒரு சமூகசெய்தி தான். நான் சொல்லவருவது, அதனுடன் எதற்காக புகைப்படம் பிரசுரிக்கவேண்டும் என்பது மட்டுமே...

அந்த புகைப்படம் கீழே... நான் அவர்களின் முகங்களை மறைத்துவிட்டேன்... ஏதோ என்னால் ஆனது!!!